::Loyola College::::


HOD's Desk

வணக்கம்! வாழ்த்துகள்!

 

லொயோலா கல்லூரியின் ஊடக ஆய்வியல் புலம் ஊடகக்கலைகள் என்னும் முதுகலை ஊடகப்படிப்பினை தமிழ்வழியில் அறிமுகம் செய்து 2006- ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ் மாணவர்களுக்காகத் தமிழில் ஆரம்பிக்கப்பட்ட ஊடகப் பட்டப்படிப்பு இது ஒன்றே என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

கடந்த பத்து வருடங்களில் முதுகலை ஊடகக்கலைகள் துறையிலிருந்து படித்து வெளிவந்த மாணவர்கள் திரைப்பட உதவி இயக்குநர்களாக , ஒளிப்பதிவாளர்களாக , படத்தொகுப்பாளர்களாக , பாடலாசிரியர்களாக , பாடகர்களாக திரை ஊடகத்திலும் , சன் , விஜய் , புதிய தலைமுறை , பாலிமர் , சத்யம் , நியூஸ் 7 போன்ற பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களிலும் , ஆனந்த விகடன் , தி ஹிந்து தமிழ் , போன்ற பத்திரிக்கைகளிலும் மற்றும் பல முன்னணி ஊடக நிறுவனங்களிலும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

தமிழகம் முழுவதுமுள்ள , ஊடகத்துறையில் ஆர்வத்துடன் , சாதிக்கவேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கும் மாணவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி , லொயோலா கல்லூரியின் முதுகலை ஊடகக்கலைகள் துறையில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறோம்.

அதன் பொருட்டு இந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கான முன் சேர்க்கைப் பயிற்சிகள் மற்றும் போட்டிகளை தற்போது அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

 

இந்த முன்சேர்க்கைப் போட்டிகளில் கலந்துகொண்டு தேர்வாகும் மாணவர்களுக்கு பிரபல ஊடக வல்லுநர்களிடம் பரிசு பெறும் வாய்ப்புடன் ,

ஊடக வல்லுநர்கள் பயிற்றுவிக்கும் ஒருநாள் ஊடகப்பயிலரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் காத்திருக்கிறது. 2016- ஆம் ஆண்டிற்கான முதுகலை ஊடகக்கலைகள் துறையின் சேர்க்கையில் முன்னுரிமை பெறவும் வாய்ப்புள்ளது.

 

போட்டிகள் / பரிசுகள் / பயிலரங்கம் குறித்த விவரங்களுக்கும் முன்பதிவிற்கும் கீழ்க்கண்ட தொடர்புகளை சொடுக்கவும்.

 

 

http://ma-loyola.blogspot.in/

Mr. Lawrence Jayakumar M.A., M.A.,M.C.J., C.F.Tech
Head, Department of Media Arts
 ::Loyola College::::
Principal & Chairman
Rev. Dr. M. Arockiasamy Xavier, S.J.

Secretary and Correspondent & Web Master
Rev. Dr. S. Lazar S.J.
CONTACT
Assistant Webmaster
Rev. Fr. A. Louie Albert S.J.
Chief Editor
Dr. K. S. Antonysamy
Phone: +91 - 44 - 28178200
Fax: +91 - 44 - 28175566
Designed & Maintained by WEPRO

©2017 Loyola College. All rights reserved.