தமிழ் மாணவர்களை தமிழ் ஊடகங்களுக்குத் தயாராக்கும் நோக்கோடு தொடங்கப்பட்டதுதான் ஊடகக் கலைகள் துறை. இந்தியாவின் முன்னோடி கல்வி நிறுவனங்களில் ஒன்றான இலயோலா கல்லூரியின் அங்கமாக இருப்பது ஊடக ஆய்வியல் புலம் (School of Media Studies). அருட்தந்தை ச. ராஜநாயகம் அடிகளாரின் தீவிர முயற்சியால், 2006-ஆம் ஆண்டில் இருந்து ஊடகக் கலைகள் துறை இயங்கி வருகிறது. இதுவரை, ஆறு ஆண்டு மாணவர்கள் இந்த முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து, தமிழகத்தின் தலைசிறந்த ஊடக நிறுவ னங்களில் பணியா ற்றி வருகின்றனர்.