admission@loyolacollege.edu 044-28178291/292/293
School of Languages

Tamil





தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழைப் பெறும் முறை

 

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு



புகழ்மிக்க இயேசு சபையினரால் தொடங்கப்பெற்ற இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறை தோற்றுவிக்கப்பட்டது . 1969 ம் ஆண்டு இளங்கலை சிறப்புத்தமிழ்ப் பாடப்பிரிவு தொடங்கப்பெற்றது . 1978 ம் ஆண்டில் தன்னாட்சித் தகுதிப் பெற்றவுடன் தமிழ்த்துறைப் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன .

 

தத்துவ போதகர் தமிழ் இலக்கியமன்றம் , இனிகோ தமிழ்ப்பேரவை , வீரமாமுனிவர் தமிழ்ப்பேரவை என மூன்று அமைப்புகள் மாணவர்களின் தமிழுணர்வை வளர்க்கும் நோக்கில் இயங்கி வருகின்றன . பல்வகையான போட்டிகள் , கருத்தரங்குகள் மற்றும் செயலரங்குகள் , அறக்கட்டளைச் சொற்பொழிவுகளின் வாயிலாக மாணவர்களுக்கு இலக்கிய சமூகச் செய்திகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன .

 

இத்துறையில் பயின்ற மாணவர்கள் பலரும் ஆசிரியர்களாக , கல்லூரிப் பேராசிரியர்களாக , திரைப்படக் கல்லூரிப் பேராசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர் . மேலும் , திரைப்படக் கலைஞர்களாகவும் , தொலைக்காட்சித் துறையிலும் விளையாட்டுத்துறையில் சிறப்புறச் செயலாற்றுபவர்களாகவும் , இதழியல் வல்லுநர்களாகவும் , காவல்துறைப் பணியாளர்களாகவும் பன்முகத் திறமைகொண்டு சமுதாய வளர்ச்சிக்கும் உயர்விற்கும் தங்கள் உழைப்பை நல்கி வருகின்றனர் .

 

இத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவராகப் பேரா . வளவன் பாண்டியன் , பேரா . முனைவர் அருள்சாமி , பேரா . முனைவர் க . ப . அறவாணன் , பேரா . முனைவர் ச . பா . அருளானந்தம் , பேரா . அடைக்கலசாமி , பேரா . முனைவர் அருணை பாலறாவாயன் , பேரா . த . சாமுவேல் , பேரா . முனைவர் ப . ஆறுமுகம் , பேரா . முனைவர் செ . தனராசு , பேரா . முனைவர் சி . அ . இராசராசன் , பேரா . முனைவர் சூ . அந்தோணி செல்வநாதன் , பேரா . முனைவர் அ . டேனியல் ஆகியோர் பணியாற்றியுள்ளனர் . கடந்த சூன் -2019 முதல் பேரா . முனைவர் து . மேரி சொர்ணாம்பாள் தலைமையில் தமிழ்த்துறை சிறப்புடன் இயங்கி வருகின்றது .

 

தமிழ்த்துறையில் நிறுவப்பட்ட அறக்கட்டளைகள்

•  முதுமுனைவர் அருள்தந்தை இராசமாணிக்கனார் , சே . ச ., அறக்கட்டளை

•  முனைவர் ந . சுப்புரெட்டியார் அறக்கட்டளை

•  கி . வா . ஜகந்நாதன் அறக்கட்டளை

•  தமிழ்ப்பண்பாட்டு மன்றம் அறக்கட்டளை

•  எஸ்தர் ராஜம்மாள் அறக்கட்டளை

 

மனோன்மணீயம் பெ . சுந்தரனார் தமிழை , ' உன் சீரிளமைத்திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே ' என்று பாடிய கனவைத் தமிழ்த்துறை நனவாக்கிக் வருகிறது .

Contact

Dr S Amalraj

Head, Department of Tamil
Loyola College (Autonomous),
Chennai - 600 034.
Tel: +91 44 2817 8200 (Ext 365)
hodtamil@loyolacollege.edu